Friday, June 4, 2010

Lyrics of Naan Eppodhu from the movie Sakkarakatti

Song: Naan Eppodhu
Movie: Sakkarakatti
Singers: Reena Bharadwaj
Lyricist:Pa.Vijay
Misic Director: A.R.Rahman

என் இதயம் கண்களில் வந்து
இமையை துடித்தது ஏனோ
நான் எப்போது.....

நான் எப்போது பெண்ணானேன்(4)?

முதல் புன்னகை பூத்தது அப்போதா?
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா?
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றான் அப்போதா?

என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்ததே அப்போதா?
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?

அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்துவிடு
என்னை உன்னில் கொண்டு சென்றுவிடு
நான் எப்போது பெண்ணானேன்(4)?

உன் பார்வை பாய்ந்தது அப்போதா?
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா?
என் விழகள் மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா?
என் விழகள் மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா?
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்தேன் அப்போதா?

நான் எப்போது பெண்ணானேன்(4)?

Lyrics of Sonnalum Ketpathillai from movie Kadhal Virus

Song: Sonnalum Ketpathillai
Movie: Kadhal Virus
Singers: Harini & Unni krishnan
Lyricist: Vaali
Misic Director: A.R.Rahman

F: சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
M: கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது - நீ
F: சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

M: உன்னை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உளதோ உயிரே
F: சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு
கிழக்குக்கு நீ தான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
M: ஓ... நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது
F: சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

N: விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே
F: நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை
M: பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சி கோடியே

F: சொன்னாலும்.. சொன்னாலும்
M: கேட்டிராது கன்னி மனது